தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் வேளையில் எதிர்க்கட்சிகள் குறித்து ஆளும் பாஜக கட்சியினரும் அவர்களுடன் கூட்டணிகள் இருப்பவர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதற்கு மறு பதில் அளிக்கும் விதமாக எதிர்க்கட்சிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி அவர்களின் பிரச்சாரம் குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இவ்வாறு தெரிவித்தார்.

அதில், பிரதமர் மோடி திட்டமிட்டு எங்கள் தலைவரைப்(முதல்வர் ஸ்டாலின்) பற்றி கூறுவதால் அகில இந்திய தலைவராக எங்களது தலைவரை அவர் உயர்த்த வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார். தமிழ்நாட்டை மட்டும் ஆண்டால் போதாது, இந்திய அளவிலே நாங்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் பேசுகிற அளவிற்கு மோடி ஸ்டாலின் அவர்களை இந்தியா முழுவதும் பிரச்சார வாயிலாக கொண்டு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.