நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி மூன்றாவதாக பொறுப்பேற்றார். இந்நிலையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த நிலையில், முதல்முறையாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

இதனை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் விமர்சித்து வரும் நிலையில், தற்போது முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்‌  பட்ஜெட்டுக்கு வரவேற்பு கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிர்ணயத்தை இலக்குகளை இந்த 5 ஆண்டுகளில் அடைவோம் என்று பிரதமர் மோடி முன்பு கூறியிருந்த கருத்தின் அடிப்படையில் பட்ஜெட் அமைந்துள்ளது என்று கூறினார்.