
டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு செயலிழந்து வருவது தெரியவந்துள்ளது. இரட்டை எஞ்சின் மாடல் என்பது பாஜகவின் ஊழல் மற்றும் இரட்டை கொள்கைகளை குறிக்கிறது. நான் பிரதமர் மோடிக்கு ஒரு சவால் விடுகிறேன். அடுத்த பிப்ரவரிக்கு முன்னதாக டெல்லிக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதற்கு முன்பு பாஜக ஆளும் 22 மாநிலங்களிலும் மக்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும். ஒருவேளை இதை மட்டும் பாஜக அரசு செய்தால் நான் பாஜகவுக்கே ஓட்டு போடுகிறேன். அதோடு இனிவரும் தேர்தல்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி அனைத்து தொகுதிகளிலும் நானே பிரச்சாரம் செய்கிறேன் என்று கூறினார். அதோடு பாஜக ஏழை மக்களுக்கு எதிரான காட்சி என்றும் விமர்சித்தார். மேலும் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் நிலையில் அங்கு வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் என்பது இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.