அப்பா சம்பாதித்த பணத்தில் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் ஒரு தோல்வியுற்ற நடிகர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். உதயநிதியின் பெயருக்கு பின்னால் உள்ள அவரது அப்பா பெயரையும் தாத்தா பெயரையும் எடுத்துவிட்டால் அவரால் இரண்டு ஓட்டு வாங்க முடியுமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் கால் நகத்தில் இருக்கக்கூடிய தூசிக்கு கூட அவர் சமம் கிடையாது எனவும் சாடியுள்ளார்.