தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் அடிக்கடி மக்களின் பயன்பாட்டை எளிதாக்குவதற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களின் வரிசைக்கு ஏற்ப டோக்கன் எண் வழங்கப்பட்டு நேரம் ஒதுக்கப்படும் நிலையில் இந்த வரிசையின்படி பதிவுக்கு செல்லும் நபர்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் வரிசைப்படுத்துதல் முறையில் குழப்பம் தொடர்ந்து இருப்பதால் வரிசையில் காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் எளிதாக தெரியும் வகையில் புதிய நடைமுறையை அமல்படுத்தப்படும் என பத்திரப்பதிவுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது புதிய நடைமுறையின் படி பத்திரப்பதிவுக்கான டோக்கன் எண் மற்றும் விண்ணப்பதாரரின் பெயர் போன்ற விவரங்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தெளிவாக காட்சிப்படுத்தப்படும் வகையில் பெரிய திரை வசதி 3.64 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் டோக்கன் என் தெரிவிக்கப்படும்போது குரல் வழி அறிவிப்பும் ஒலிக்கப்படும்.