இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் மக்கள் அனைவரும் சேமிப்பை RD கணக்குகள், ஃபிக்ஸட் டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பணத்தை சேமித்து வருகின்றனர். இதை தொடர்ந்து சில நிறுவனங்கள் தொழிலார்களிடமிருந்து மாதத்துக்கு ஒருமுறை பிஎப் போன்றவற்றை பிடித்து வருகிறது.

இந்த பணத்தை தொழிலாளர்களின் முதுமை காலத்திலோ அல்லது அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காகவோ வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பிஎஃப் பணத்தை தொழிலாளர்கள் அவர்களது முதுமை காலத்திற்கு முன்பே மருத்துவ சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை அமலுக்கு வந்த நிலையில் அந்த பணத்தை ஆன்லைன் மூலம் எப்படி எடுப்பது என்பதை விரிவாக பார்க்கலாம்.

முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற லிங்கை கிளிக் செய்து இணையதள பக்கத்திற்கு சென்று (யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்) அதாவது பாஸ்வேர்டு மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். அதன்பின் உள்ளே நுழைந்த வங்கி கணக்கு போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். இதைத்தொடர்ந்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உள்ளே சென்று “online service” என்ற லிங்கை கிளிக் செய்யவும். அதன்பின் உரிமைகுரல் படிவம் 31 என்பதை கிளிக் செய்யவும். பின்பு “proceed for online claim” என்பதை கிளிக் செய்தால் உங்களது படிவம் ஆன்லைன் மூலம் உரிமையாளர்களிடம் சென்றடையும்.