இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா எனும் அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பின் அலுவலகம் தெலங்கானா ஜகித்யா மாவட்டத்திலுள்ள ஜகித்யாலா நகரில் சென்ற 2019-ம் வருடம் முதல் முதலாக அமைக்கப்பட்டு உள்ளது. அப்போது முதல் பல வழக்குகள் இந்த அமைப்பின் மீதும், இந்த அலுவலகம் மீதும் போடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜகித்யாலா மற்றும் நிஜாமாபாத் போன்ற இடங்களில் தடைசெய்யப்பட்ட அமைப்பால் அமைக்கப்பட்ட மையங்களில் தற்காப்பு கலை எனும் பெயரில் பயங்கரவாத பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக 200 பேர் சிக்கினர். இந்நிலையில் ஜகித்யாலா மாவட்டத்தின் இஸ்லாம்புராவை சேர்ந்த அப்துல் சலீம், நிஜாமாபாத் மாவட்டத்தின் மலப்பள்ளி முஜாஹித் நகரைச் சேர்ந்த முகம்மது அப்துல் அஹத் மற்றும் ஆந்திரா நெல்லூர் மாவட்டத்திலுள்ள காஜா நகர் புச்சிரெட்டிபலென் மண்டல் பகுதியைச் சேர்ந்த ஷேக் இலியாஸ் அகமது ஆகிய 3 பேரும் தேசிய புலனாய்வு முகமையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் 3 பேர் பற்றிய சரியான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வெகுமானம் அளிக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்து உள்ளது. மேலும் தகவல் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்ஐஏ உறுதியளித்துள்ளது. ஆகவே தெலங்கானாவில் தடைசெய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பற்றிய உரிய தகவலை அளிப்போருக்கு 2 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.