இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் வசதிகள் அதிகம் மற்றும் கட்டணம் குறைவு. நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் சிறந்த தேர்வாக இருப்பதால் பலரும் விரும்புகிறார்கள். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ரயில்களில் செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு 11 மணி வரை அதிகாலை 5 மணி வரை ரயில்களில் போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் போடக்கூடாது.

மேலும் இரவு நேரத்தில் சார்ஜ் போட்டுவிட்டு சிலர் மறந்து தூங்கி விடுவார்கள். இதனால் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இரவு நேரத்தில் செல்போன் மற்றும் லேப்டாப் ஓட வைத்து சார்ஜ் செய்வதற்கு ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதை மீறி சார்ஜ் போன்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும்.