இந்தியாவில் உள்ள பிரபலமான தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் பலமுறை பால் விலையை உயர்த்தியுள்ளது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள அரசு கூட்டுறவு பால் விற்பனையகங்களும் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பல்யான் இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பால் விற்பனை நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் கிடைக்கும் பணத்தில்  75 சதவீதத்தை பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் அளித்து விடுகிறது.

விவசாயிகளின் பாலுக்கு உரிய விலை கிடைக்க வேண்டிய அதே சமயத்தில் நுகர்வோருக்கு சரியான விலையில் பால் வழங்க வேண்டியிருக்கிறது. சமீப காலமாக கால்நடை தீவனத்தின் விலை வேகமாக அதிகரித்துக் கொண்டிருப்பதனால் பால் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மூன்று தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. இந்த தடுப்பூசி தற்போது பரிசோதனை நிலையில் இருக்கிறது. இதற்கான பரிசோதனை முடிவடைந்த பின் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.