லக்னோவில் வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதில் கலந்துகொண்ட அம்பானி கூறியதாவது, அடுத்த 10 மாதங்களில் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் பயிற்சி தொலைதொடர்பு சேவையை தொடங்க இருக்கின்றோம். இது தவிர பத்து ஜிகாவாட் மரபுசாரா எரிசக்தி திட்டத்தையும் தொடங்க இருக்கின்றோம். அதேபோல் அடுத்த நான்கு வருடங்களில் ஜியோ தொலைத்தொடர்பு சேவை மரபுசாரா எரிசக்தி திட்டம் ரிலையன்ஸ் சில்லறை விற்பனைகங்கள் போன்றவற்றின் மூலமாக உத்தரப்பிரதேசத்தில் அடுத்த நான்கு வருடங்களில் ரூ.75,000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளோம்.

இந்த திட்டத்தின் மூலமாக மாநிலத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் உயிரி எரிபொருள் தயாரிப்பு பிரிவில் விவசாயக் கழிவுகளில் இருந்து எரிவாயு மற்றும் எத்தனால் உற்பத்தி செய்யும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் உத்தரப்பிரதேசத்தில் பெரிய அளவில் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத விதமாக இந்த எரிபொருளை வீட்டு தேவையில் இருந்து தொழிற்சாலைகள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.