
90 நாட்கள் கெடாமல் பயன்படுத்தப்படும் பால் பாக்கெட் களின் விலையில் இரண்டு ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோர் அதிக நாட்கள் பயன்படுத்தும் விதமாக தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட 450 மில்லி லிட்டர் மற்றும் 150 மில்லி லிட்டர் அளவிலான பால் பாக்கெட்டுகளின் விலையில் இரண்டு ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி 30 ரூபாய்க்கு விற்பனையான 450 மில்லி லிட்டர் பால் பாக்கெட் இனி 28 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 150 மில்லி லிட்டர் பால் பாக்கெட் பத்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பாலுக்கான மொத்தம் மற்றும் சில்லறை 93436 17445 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.