தமிழகத்தில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இதில் பல அமைச்சர்களும் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஐடி துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அண்மையில் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து பொறுப்பேற்றதும் ஆவின் ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கான கடன் வசதி மற்றும் கால்நடையை பராமரிக்க தேவையான தீவனங்கள் ஆகியவை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.