சமூக வலைதளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பாலைவனத்தில் கடும் வெயிலால் சோர்ந்து சாலையோரத்தில் விழுந்திருந்த ஒட்டகத்துக்கு, அங்கு வந்த வாகன ஓட்டுநர் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் நெகிழ்ச்சிகரமான காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “Nature is Amazing” என்ற X  பக்கத்தில் இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்ததற்குப் பிறகு, அது 3.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. வீடியோவில், டிரைவர் தனது வாகனத்தை நிறுத்தி, ஒரு தண்ணீர் பாட்டிலுடன் ஒட்டகத்தின் அருகில் சென்று, அதன் வாயில் நேரடியாக ஊற்றி தண்ணீர் கொடுப்பது பதிவாகியுள்ளது.  அந்த ஒட்டகம் தண்ணீரை உந்திவிழுங்கும் காட்சிகள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இந்த வீடியோவிற்கு, “இது தான் உண்மையான மனிதத்தன்மை. இதுபோன்ற செய்கைகள் தான் உலகத்தை இன்னும் சிறப்பாக மாற்றும்,” என்று பலரும் சமூக வலைதளங்களில் உருக்கமாக கருத்துகளை பகிர்ந்துள்ளனர். “ஒரு சாதாரண செயல் கூட ஒரு உயிரை காப்பாற்ற முடியும்,”, “ஒட்டகத்தின் கண்களில் நன்றி உணர்வு தெரிகிறது,” எனும் பதிவுகள் அதிகமாக பகிரப்பட்டுள்ளன. மேலும், “இந்த வீடியோ என் மனிதநம்பிக்கையை மீண்டும் எழுப்புகிறது” எனும் நெஞ்சை உருக்கும் வார்த்தைகளும் பரவலாகக் காணப்படுகின்றன.

 

 

இத்தகைய வீடியோக்கள் வழியாக, வறட்சியால் பாதிக்கப்படும் பாலைவன பகுதிகளில் உள்ள விலங்குகளின் அவல நிலை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுகிறது. “விலங்குகள் பேச முடியாது, ஆனால் அந்த டிரைவர் அந்த உயிரின் துயரத்தை உணர்ந்தார்,” என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ மனிதாபிமானத்தின் அழகான முகமாக இணையத்தில் பரவி, ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.