இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது.

இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை மைனராக கருதுவது குறித்து மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளது. அதாவது, “ஆதார் அட்டை விவரங்களை வைத்து மைனர் என்பதை உறுதி செய்ய முடியாது. பிறப்பு சான்றிதழ், 10ம் வகுப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்து, மைனர் என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வயது நிர்ணய பரிசோதனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.