குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் சைலேஷ் ரத்தோட் என்ற 35 வயது நபர் 18 மாதங்களுக்கு முன்பு 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். தற்போது ஷைலைஸ் ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் சைலேஷ் மீண்டும் அதே மூதாட்டியை கடந்த 15 ஆம் தேதி மற்றும் 22ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் இதனை வெளியில் கூறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.