ஒரு முதியவரை மாபெரும் பைதான் பாம்பு தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், பாம்பைப் பிடிக்க முயன்ற முதியவரின் கன்னத்தை பைதான் பாம்பு கடித்து, 40 வினாடிகள் வரை விடாமல் கடித்த அதிர்ச்சிக்குறிய காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பதற்கான உறுதியான தகவல் வெளியாகவில்லை என்றாலும், “therealtarzann” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், வயதான நபர் ஒருவர் ஒரே கையில் கையுறை அணிந்து கொண்டு பாம்பைப் பிடிக்க முயல்கிறார். அவருடன் இன்னொரு நபரும் பாம்பைப் பிடிக்க உதவுகிறார். பாம்பு ஒரு வலையில் சிக்கிக்கொண்டு தரையில் புரண்டு கிடந்தது போல காட்சியளிக்கிறது.
இருவரும் அதனை பிடித்து வலையிலிருந்து விடுவிக்க முயன்றபோது, பாம்பு மிகவும் கோபமடைந்து அந்த முதியவரின் கன்னத்தை கடித்தது. அருகில் இருந்தவர்கள் அதைப் பார்த்து பதற்றம் அடைந்தும், முதலில் யாரும் நெருங்கத் துணியவில்லை.
பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாம்பை அதன் பிடியிலிருந்து விலக்கி, முதியவரை மீட்ட சம்பவம் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி “Best caption wins” என்ற தலைப்புடன் பகிரப்பட்டதையடுத்து, பலரும் நகைச்சுவை கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.
