நெருக்கமான சந்துகள் நிறைந்த பத்திரிகையாளர் காலனியில் (Patrakar Colony), ஒரு சிவப்பு நிற டிராவலர் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், ஒருவரின் உயிரைப் பறிக்கும் அளவிற்கு விபரீதமாக முடிந்துள்ளது. வாகனத்தை நிறுத்துவதில் இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்த ஒரு நபர், திடீரென நிலைகுலைந்து அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் ஆத்திரமே இந்த உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. “ஒரு சின்ன பார்க்கிங் சண்டைக்குப் போய் இப்படி ஒரு உயிர் போக வேண்டுமா?” என அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் பேசி வருகின்றனர். பொது இடங்களில் வாகனங்களை நிறுத்தும் போது சிவில் சென்ஸ் மற்றும் பொறுமை எவ்வளவு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உரக்கச் சொல்லியுள்ளது. ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாததால் ஒரு குடும்பத்தின் நிம்மதியே பறிபோயுள்ளது பெரும் சோகம்.