
கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன காரைகாட்டில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். விஜயபாலன் வீட்டில் திடீரென நுழைந்த பாம்பு, அடுக்கி வைத்திருந்த செருப்பு மற்றும் ‘ஷூ’க்களில் ஒளிந்தது. இதைக் கண்ட விஜயபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர், உடனடியாக பாம்புபிடி வீரரை அழைத்து உதவி கோரினர். பாம்பு பிடி வீரர் செல்வா, விஜயபாலனின் மகனின் ‘ஷூ’வுக்குள் பதுங்கியிருந்த நான்கு அடி நீளமுள்ள நாகப்பாம்பை சிறப்பாக பிடித்து, அருகிலுள்ள காப்புக்காட்டில் விட்டார்.
இதே போல வெளிசெம்மண்டலத்தில் உள்ள ஜெயராமனின் வீட்டிலும், ‘ரேக்’ல் வைத்திருந்த ‘ஷூ’களில் குட்டி பாம்பு ஒன்று பதுங்கியது. பதறிய ஜெயராமன், உடனடியாக பாம்புபிடி வீரரை அழைத்தார். வீரர் அதிரடியாக வந்து, பாம்பை பாதுகாப்பாக பிடித்து காட்டில் விட்டார்.