
சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலானது. இந்த வீடியோ, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. பாராசெய்லிங் செய்ய தயாராக இருக்கும் பயணி மற்றும் உதவியாளருடன் தொடங்கும் இந்த வீடியோ, சில விநாடிகளில் வியப்பூட்டும் சம்பவத்தை பதிவு செய்துள்ளது. வீடியோவில், பாராசெய்லர் பாதுகாப்பு கம்பிகள் மற்றும் ஹார்னஸ்களுடன் தயாராக இருக்க, ஒரு பாராசெய்லிங் ஆப்பரேட்டர் கூடவே இருந்து உதவி செய்கிறார். ஆனால் அந்த ஆப்பரேட்டருக்கு எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லை.
பயணி காற்றில் எழும்பும் தருணத்தில், உதவியாளரும் கயிறுகளை பிடித்து அவருடனே பறக்கிறார். ஆரம்பத்தில் அவர் சற்றே நிலை தடுமாறினாலும் பின்னர் சீராக கையாளுகிறார். ஆனால் ஓரு சில நிமிடங்களில் பயணி திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து நேராக கடலில் விழுகின்றார். அந்த பயணி ஏன் திடீரென கீழே விழுந்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. வலுவான காற்று, சாதனப் பிழை அல்லது தவறான உடல் நிலை காரணமா என பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவில் நிகழ்ந்ததற்குப் பிந்தைய நிலைமைகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
— Second before disaster (@NeverteIImeodd) March 21, 2025