மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டு வந்தது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது மணிப்பூர் நடந்து வரும் வன்முறை சம்பவம் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார். இதற்கு ஆளும்  கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் தொடர்ந்து ராகுல் காந்தி பேசினார்.

அப்போது “மணிப்பூர் மக்களின் குரலை நசுக்கி விட்டீர்கள். அவர்களை கொன்றதால் பாரதத்தாயை கொன்று விட்டீர்கள். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல, தேசத் துரோகிகள்” என கூறியதோடு ஏன் பிரதமர் மணிப்பூர் மக்களை பார்க்க செல்லவில்லை என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.