மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் என் எம் எம் எஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த வருடம் இந்த தேர்வுக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்வி உதவித்தொகை பெற உள்ள மாணவர்கள் வங்கி கணக்கு உட்பட அனைத்து விவரங்களையும் அதற்குரிய படிவங்களில் பதிவு செய்திருந்தனர். இந்த விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஆகஸ்ட் 10 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இன்றே கடைசி நாள் ஆகும்.