இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் முக்கியமான பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் முன்னதாகவே விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும். இந்த விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பை ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதம் 12 நாட்களும் செப்டம்பர் மாதம் 18 நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதனை அறிந்து வங்கி சார்ந்த வேலைகளை முன்னதாக திட்டமிட்டு முடித்துக் கொள்வது நல்லது.

ஆகஸ்ட் விடுமுறைகள்:
  • ஆகஸ்ட் 12: இரண்டாவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 13: ஞாயிறு
  • ஆகஸ்ட் 15: சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி)
  • ஆகஸ்ட் 18: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி
  • ஆகஸ்ட் 20: ஞாயிறு
  • ஆகஸ்ட் 26: நான்காவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 27: ஞாயிறு
  • ஆகஸ்ட் 28: முதல் ஓணம்
  • ஆகஸ்ட் 29: திருவோணம்
  • ஆகஸ்ட் 30: ரக்ஷா பந்தன்:
  • ஆகஸ்ட் 31: ரக்ஷா பந்தன்/ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி/பாங்-லாப்சோல
  • செப்டம்பர் விடுமுறை நாட்கள்
  • செப்டம்பர் 6 : ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி
  • செப்டம்பர் 7 : ஜன்மாஷ்டமி (ஷ்ரவண வத்-8)/ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி
  • செப்டம்பர் 18 : வரசித்தி விநாயக விரதம்/விநாயக சதுர்த்தி
  • செப்டம்பர் 19 : விநாயக சதுர்த்தி/சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷா)
  • செப்டம்பர் 20 : விநாயக சதுர்த்தி (2வது நாள்)/நுகாய்
  • செப்டம்பர் 22 : ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம்
  • செப்டம்பர் 23 : மகாராஜா ஹரி சிங் ஜி பிறந்தநாள்
  • செப்டம்பர் 25 : ஸ்ரீமந்த சங்கரதேவரின் ஜன்மோத்ஸவ்
  • செப்டம்பர் 27 : மிலாத்-இ-ஷெரிப் (முஹம்மது நபி பிறந்த நாள்)
  • செப்டம்பர் 28 : ஈத்-இ-மிலாத்/ஈத்-இ-மீலாதுன்னபி – (முஹம்மது நபியின் பிறந்தநாள்) (பரா வஃபத்)
  • செப்டம்பர் 29 : ஈத்-இ-மிலாத்-உல்-நபியைத் தொடர்ந்து இந்திர ஜாத்ரா.