பிரபல டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் வருடம் வெளியாகிய பாய்ஸ் படத்தில் சித்தார்த், மணிகண்டன், பரத், நகுல், ஜெனிலியா, விவேக் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் 5 இளைஞர்கள் வீட்டுக்கு பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அழைத்து வருவார்கள். அப்பெண் கதாபாத்திரத்தில் நடிகை புவனேஷ்வரி நடித்து இருப்பார். அண்மையில் ஒரு பேட்டியில் புவனேஷ்வரி இந்த காட்சியில் நடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது ” நான் பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன் சீரியலில் நடித்து வந்தேன். அக்காட்சி குறித்து டைரக்டர் ஷங்கர் சார் விவரித்தார். முதல் திரைப்படத்திலேயே இதுபோன்ற கதாபாத்திரமா என மறுத்தேன். அப்போது அவர் 5 இளைஞர்கள் உங்களுடன் நடிக்கும்போது அவர்களின் கை விரல் கூட உங்கள் மீது படாது என்று உறுதியளித்தார். இதையடுத்து நானும் இந்த படத்தில் நடித்தேன். இந்த படத்தின் வாயிலாக எனக்கு தெலுங்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது” என புவனேஷ்வரி கூறியுள்ளார்.