இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை அதிக அளவு ஆக்கிரமித்துள்ளன. பொதுவாகவே பாம்புகள் என்றால் அதன் விஷ தன்மை தான் முதலில் அனைவருடைய நினைவுக்கும் வரும். ஏனென்றால் மனிதர்களின் உயிரை மிகவும் சுலபமாக எடுக்கும் தன்மை கொண்டவை.

அதிலும் விரியன் பாம்பு வகைகள் மிகவும் வீரியமான விஷத்தன்மை கொண்டது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் Gaboon Viper என்ற விரியன் பாம்பு ரகம் ஒன்றின் விஷத்தை பிரித்தெடுக்கும் காட்சி வெளியாகி உள்ளது. இந்த விஷமானது மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதாவது வலி நிவாரணிக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.