
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் தென்னை விவசாயிகளின் நலனை கருதி அனைத்து நியாய விலை கடைகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.
மலிவு விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டால் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் மத்திய அரசுடன் தமிழக அரசு இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.