உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா பகுதியில், ஃபதேபாத் சாலையில் உள்ள TDI மால் சாலை சந்திப்பில் ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கமடைந்துள்ளது. ‘Shahar Adhyaksh’ (நகரத் தலைவர்) என்ற பெயர் பலகையுடன் வந்த இனோவா கார் ஒன்று, சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தபோதும் அதை மீறி வேகமாக சென்று மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்த கார், உள்ளூர் பாஜக தலைவருடையது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விபத்தைத் தொடர்ந்து, அந்த இனோவா காரில் இருந்த பாஜக தலைவர் மற்றும் அவரது நண்பர்கள் எதிரே வந்த காரின் உரிமையாளரை பொதுமக்கள் பார்க்கும் இடத்தில் சரமாரியாக தாக்கியதாக புகார்கள் எழுந்துள்ளன. இது மட்டுமல்லாது, தாக்கப்பட்ட நபரின் கார் சாவியை பறித்து, பின்னர் அதை சாலையில் தூக்கி வீசியும் விட்டனர். இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வு முழுவதும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட பாஜக தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் அந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.