பாஜக மூத்த தலைவரும் உத்தர பிரதேச மாநிலத்தை  சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்த்வார் துபே (73) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை காலமானார்.
துபேயின் உடல் இன்று பிற்பகல் ஆக்ராவுக்கு கொண்டு வரப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து  துபேயின் மறைவுக்கு பாஜக தலைவர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும்  இரங்கல் தெரிவித்துள்ளனர். ஹர்த்வார் துபேவின் மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.