உத்தராகண்ட் கேதார்நாத்தில் சார்தாம் யாத்திரைக்கு போகும் பக்தர்களையும் அவர்களது உடைமைகளையும் ஏற்றி செல்வதற்காக குதிரைகள், கோவேறு கழுதைகள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் இந்த குதிரைகளுக்கு ஓய்வே கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்குவதாகவும், பராமரிப்பாளர்களால் தாக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இரண்டு பராமரிப்பாளர்கள் சேர்ந்து ஒரு குதிரையை வலுக்கட்டாயமாக புகைப்பிடிக்க வைக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்களால் குதிரைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு அதில் போகும் பக்தர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது என விலங்குகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாக கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.