பாஜக உடனான கூட்டணி குறிப்பில் அதிமுக இதுவரை உறுதியாக இருக்குமானால் வாழ்த்துவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக பேசிய சீமான், பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்திருக்கும் அதிமுகவின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன். தாமதமான முடிவென்றாலும் சரியான முடிவு. இந்த முடிவை முன்னரே எடுத்து இருந்தால் அதிமுக தனது செல்வாக்கை இழந்து இருக்காது என்று சீமான் தெரிவித்துள்ளார்.