தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டிலும் கண்டிப்பாக திராவிட மாடல் ஆட்சி தான் அமையும் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 2026 ஆம் ஆண்டிலும் கண்டிப்பாக தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான். தமிழ்நாடு என்றுமே டெல்லிக்கு out of control தான் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழன் என்று ஒரு இனம் உண்டு அதற்கு தனி ஒரு குணம் உண்டு. தமிழ்நாட்டிற்குள் நுழைந்து இந்த மண்ணை பாழாக்க துடிக்கும் பாஜகவுக்கும் இதற்கு துணை போகும் இனமானம் இல்லாத அடிமைகளுக்கும் தமிழ்நாட்டின் நுழைவு வாயிலான திருவாரூர் மாவட்டத்திலிருந்து சவால் விடுகிறேன். எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக் அழைத்து வாங்கள். மேலும் 2026-லும் கண்டிப்பாக திராவிடம் மாடல் ஆட்சி தான் அமையும் என்று பதிவிட்டுள்ளார்.