தமிழ் சினிமாவில் கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நவ்நீத் கவுர் ராணா. இவர் பாஜக கட்சியின் முன்னாள் எம்பி ஆவார். வருகிற 20-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நடிகை ராணாவும் பாஜகவுக்கு ஆதரவாக நேற்று இரவு ஹலார் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அப்போது அங்கிருந்த மக்கள் சேர்கள் மற்றும் கற்கள் போன்றவற்றை அவர் மீது வீசி தாக்குதல் நடத்தியதோடு அங்கிருந்த பாஜகவினர் மீதும் தாக்குதல் நடத்தினார். இது தொடர்பாக நடிகை கொடுத்த புகாரின் பேரில் 45 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.