
ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தேர்தல் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் மற்றும் என்சிபி கூட்டணியை பாஜக பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியை தேசவிரோத சக்தி என்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூறினர். இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கார்கே பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ கட்டிப்பிடித்து மகிழ்வதற்கும் பிரியாணி சாப்பிடுவதற்கும் பாகிஸ்தானுக்கு சென்றது யார். என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு அமித்ஷா மற்றும் மோடி இருவரும் மக்களை திசை திருப்புவதற்காக பொய் பேசுகிறார்கள். நாங்கள் ஒருபோது பிரியாணி சாப்பிடுவதற்காகவோ அல்லது அவரை (நவாஸ் ஷெரீப்) கட்டி தழுவுவதற்காகவோ அங்கு செல்லவில்லை. பாஜக இந்தியாவை காதலிப்பதாக கூறலாம். ஆனால் திருமணம் என்னவோ பாகிஸ்தானுடன் தான் பாஜகவுக்கு நடந்துள்ளது. காஷ்மீரில் தீவிரவாத சம்பவம் அதிகரித்துவிட்ட நிலையில் காஷ்மீர் அமைதியாக இருப்பதாக மோடி பொய் சொல்கிறார். பாஜகவை ஓரம் கட்டுவதற்கு தான் காங்கிரஸ் மற்றும் என்சிபி கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் சென்று நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்-ஐ சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.