பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கூட்டணி பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. ஏற்கனவே கூட்டணி பற்றி உள்துறை மந்திரி அமித்ஷா பேசி விட்டார். அவர் பேசியதை இறுதி முடிவாக எடுத்துக் கொள்ளுங்கள். மக்களில் 4-ல் ஒருவர் மட்டும்தான் முதல்வருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நான் பாஜகவில் தொண்டராக கூட பணியாற்ற தயாராக இருக்கிறேன்‌.

எனக்கு பாஜகவின் வளர்ச்சி மட்டும்தான் முக்கியமே தவிர என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி முக்கியம் கிடையாது. என்னுடைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. பாஜகவுக்கு திரை மறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சி போன்று டெல்லியில் அமர்ந்து கொண்டு பாஜக தமிழ்நாட்டை கட்டுப்படுத்தாது. விஜய் மற்றும் செங்கோட்டையனுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளும் அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. மேலும் ஒய் பிரிவு பாதுகாப்பும் மற்றும் விஜய் செங்கோட்டயனுக்கும் இடையே எந்தவித உறவும் இல்லை என்று கூறினார்.