காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி நிச்சயம் தங்கள் வெற்றியை பதிக்கும் என்பதை டெல்லி பாஜக தலைவர்கள் உணர்ந்துள்ளனர். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் பாஜக வேட்பாளராக பிரபல நடிகர் அக்ஷய் குமாரை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகளுக்கும் புதுடெல்லி தொகுதியில் சீட் கொடுக்க பாஜக முடிவு செய்துள்ளது.