மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா பாஜகவில் இணைந்துள்ளார். அவர் தனது ஜாதி சான்றிதழை மோசடியாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பாஜகவில் இணைந்திருக்கும் நவ்நீத், மீண்டும் அமராவதி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட இருக்கிறார். இவர் தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.