தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை திமுக கட்சியை சேர்ந்த திண்டுக்கல் ஐ லியோனி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முன்னதாக விஜயை டுபாக்கூர் என்றும் இரண்டு வருடங்களில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் அதெல்லாம் நடக்கக்கூடிய விஷயமா என்றும் விஜயை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் விஜயை விமர்சனம்  செய்துள்ளார். அதாவது திமுக சார்பில் ஒரு பொதுக்குழு நிகழ்ச்சியில் திண்டுக்கல் ஐ லியோனி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அந்த கடைசி படத்தின் பெயரை பார்த்தீங்களா. GOAT என்றாலே ஆடு என்று அர்த்தம்.‌ இதிலிருந்தே தெரிகிறதா அந்த ஆடும் இந்த ஆடும் ஒன்றுதான் என்றார். அதாவது அண்ணாமலையையும் விஜயையும் ஆடு என்று குறிப்பிட்டு அவர்கள் இருவரும்  ஒன்றுதான் என்று மறைமுகமாக கூறினார். அதன் பிறகு நேற்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் திமுகவை கைநீட்டி பேசுகிறார்கள்.

பாஜகவின் கைத்தடியாக திமுகவை கைநீட்டி பேச வந்த விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியிணை திமுக தூள் தூளாக்கும் என்று கூறினார். 200 தொகுதிகளில் வெல்வோம் என்று திமுக இறுமாப்புடன் கூறும் நிலையில் கண்டிப்பாக அவர்கள் மைனஸில் செல்வார்கள் என்று விஜய் கூறியிருந்த நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தை திமுக தூள்  தூளாக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதேபோன்று திமுகவை விமர்சித்த பலரும் ஒன்றுமில்லாமல் காணாமல் போய் உள்ளனர். அதுதான் தற்போது நடக்கப் போகிறது என்று கூறினார். மேலும் விஜயை திண்டுக்கல் ஐ லியோனி இப்படி சரமாறியாக விமர்சித்து வருவது தமிழக வெற்றிக்கழகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.