பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலீபான் என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரம் பயங்கரவாத ஒழிப்புத் துறையினர் 700 இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்குரிய 49 பேரை கைது செய்தனர். இவர்களில் தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த 9 தளபதிகளும் அடங்குவர். இவர்கள் பயங்கர தாக்குதலுக்கு திட்டம் தீட்டி வந்ததாகவும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று பலுசிஸ்தான் மாகாணத்தில் 4 பயங்கரவாதிகளும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாத ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட இந்த தேடுதல் வேட்டையில் 29 ஆயிரத்திற்கும் அதிகமானோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.