சமூகவலைதளங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ட்விட்டர். எலான் மஸ்க்  ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முதலில், ட்விட்டர் நீலப்பறவை லோகோவை மாற்றி எக்ஸ் என்ற புதிய லோகோவை அறிமுகப்படுத்தினார். தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்து இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இவரது நடவடிக்கைகளுக்கு பல விமர்சனங்கள் வந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் மனதில் நினைத்ததை செய்து வருகிறார்.

இந்நிலையில்  வீடியோ, ஆடியோ கால் வசதி விரைவில் வருகிறது. இது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு போன்ற செயலி தளத்திலும் மேக், கணினியிலும் செயல்படும். இதற்கு போன் நம்பர் எதுவும் தேவையில்லை. உலகளாவிய பயனுள்ள முகவரிகளின் தொகுப்புதான் ட்விட்டர். அவை தனித்துவமானது என அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து நெட்டிசன்கள் சிலர் ஆதரவு தெரிவித்தும் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர்.