மகப்பேறு விடுமுறை என்பது இந்தியாவில் மிகவும் பழமையானது. பிரசவத்திற்காக பெண்களுக்கும் அவர்களுக்கு துணையாக இருக்கும் கணவர்களுக்கும் நிறுவனங்கள் தலைப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனை சேர்ந்த standard  சார்ட்டர்டு  வங்கி உலகம் முழுவதும் பணிபுரியும் அதனுடைய ஊழியர்களுக்கு 20 வாரங்கள் வரை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுடைய பாலினம், திருமண நிலை அல்லது குழந்தை அந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறும் விதம் ஆகிவிட்டது. 20 வார தந்தை மற்றும் தத்தெடுப்பு விடுப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்-1 முதல் தந்தை மற்றும் தத்தெடுப்பு விடுப்பு அதிகரிப்பு ஆகியவற்றின் பலனை ஊழியர்கள் பெறத் தொடங்குவார்கள் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது. இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படும்போது ஊழியர்கள் தந்தையானாலோ அல்லது குழந்தையைத் தத்தெடுத்தாலோ 20 வாரங்கள் வரை ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெறுவார்கள்.