கடந்த வருடம் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய எலான் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை செயல்படுத்தினார். சமீபத்தில் ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை மாற்றி அமைத்தார். அதன் மூலம் ட்விட்டர் X என்று மாற்றப்பட்டது. எக்ஸ் தளம் சூப்பர் ஆப்-பாக செயல்படும் என்று கூறியிருந்த எலான் மஸ்க் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி எக்ஸ் தளத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளது.

அதாவது எக்ஸ் தளத்தின் மூலம் இனி ஆடியோ அழைப்பு வீடியோ அழைப்பு போன்றவற்றை மேற்கொள்ளலாம். இது ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், பிசி மேக் என அனைத்திலும் இயங்கும். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட எலான் மஸ்க் இந்த அழைப்புகளை மேற்கொள்ள தொலைபேசி எண் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது சந்தா செலுத்தி ப்ளூ டிக் பெற்ற பயனார்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.