பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா பகுதியில் பாதுகாப்பு படையினர் அமைத்திருந்த சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் 8 ராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு நடந்த தாக்குதல்களை காட்டிலும் இது மோசமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இதே மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.