பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். இவரை கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ கொலை செய்துவிட்டதாக தற்போது ஒரு தகவல் தீயாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவரை விஷம் கொடுத்து கொன்று விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகிறது. அதாவது இது வெறும் வதந்தி என்றே கூறப்படுகிறது.

 

அதே சமயத்தில் பாகிஸ்தான் ஊடகங்கள் இது ஒரு போலியான செய்தி என்று கூறி வருகிறது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் ஒரு செய்தியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்துவிட்டதாகவும் அதற்காக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறுகிறது என்றும் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் பரவி வரகிறது.