பாகிஸ்தானின் லாகூர் நகரில் சமீபகாலமாக மக்கள் திடீர் இணைய முடக்கத்தால் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். ஆரம்பத்தில் இது தொழில்நுட்பக் கோளாறு என்று அனைவரும் நினைத்த நிலையில், அதன் பின்னணியில் இருந்த உண்மை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள சில திருடர்கள், அதிக விலைக்கு விற்கும் ‘பைபர் ஆப்டிக்’ கேபிள்களைத் திருடி லாபம் பார்ப்பதற்காக, இணைய இணைப்பை வழங்கும் கேபிள்களை மொத்தமாக வெட்டித் தூக்கிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
في مدينة لاهور الباكستانية
عانى كثير من السكان من حالات إنقطاع الإنترنتليظهر لاحقاً أن من خلف هذه الإنقطاعات هم لصوص السكراب بعد أن علموا أن كيابل الألياف المخصصة لإمدادات الإنترنت هي الأغلى في سوق السكراب pic.twitter.com/CYK0vI6gsn
— ناصر (@bt1jj) May 4, 2026
திருடர்களின் இந்தச் செயலால் அந்தப் பகுதி முழுவதும் இணைய சேவை முற்றிலும் முடங்கியதோடு, ஆன்லைன் கல்வி, வியாபாரம் மற்றும் அலுவலகப் பணிகள் என அனைத்தும் ஸ்தம்பித்தன.
பழைய இரும்பு விலைக்கு இந்தக் கேபிள்கள் அதிக விலைக்குப் போகும் என்ற பேராசையினால் செய்யப்பட்ட இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பாகிஸ்தானின் நிலையை உலகிற்குக் காட்டி வருகிறது.
ஒரு சிலரின் பண ஆசைக்காக ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ள இந்தச் சம்பவம் லாகூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
