ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல் காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதாவது பைசரன் பள்ளத்தாக்கில் 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறி வைத்த அழித்தது. இதனால் பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே மூன்று நாட்கள் போர் நடைபெற்ற நிலையில் பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிடென்ஸ் ப்ரணட் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பை தற்போது அமெரிக்கா வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தி ரெசிடென்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், லஷ்கர் தெய்பாவால் நியமிக்கப்பட்ட ஒரு உலகளாவிய பயங்கரவாதியாகவும் நியமிப்பதாக அறிவித்துள்ளார்.