பழம்பெரும் வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி (91) காலமானார். மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று  இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1952 முதல் 1994 வரை வானொலியில் நீண்ட காலம் ஓடிய ‘கீதாமாலா’ மூலம் பிரபலமானார். வானொலி மாஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் இவர் 54,000 வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.