
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் குஃபி பெயிண்டல். இவர் மகாபாரத தொடரில் சகுனி மாமா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் சீரியல்கள் மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக நடிகர் குஃபி பெயிண்டல் காலமானார். இவருக்கு வயது தற்போது 78. மேலும் இவருடைய மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.