தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68-வது படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் லியோ பட பிடிப்புக்கு பிறகு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு படக் குழுவினரோடு சென்னை கடற்கரை அருகே உள்ள ஒரு ஹோட்டலில் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அப்போது தளபதி 68 படத்திற்கு சிஎஸ்கே என பெயர் வைக்கலாம் என வெங்கட் பிரபு கூறியதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜயுடன் ஆலோசித்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.