அர்ஜென்டினாவில் ஒரு தாய் தனது மகனைப் பள்ளி விழாவிற்காகத் தயார் செய்ய மேற்கொண்ட வினோதமான முயற்சி, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் நடைபெற்ற மாறுவேடப் போட்டிக்காக, அந்தத் தாய் தனது மகனின் உடல் முழுவதும் ‘லேடெக்ஸ் பெயிண்ட்’ பூசி அழகு பார்த்துள்ளார். விழா முடிந்த பிறகு, அந்த வண்ணப்பூச்சைச் சுத்தப்படுத்த முயன்றபோதுதான் அக்குடும்பத்திற்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. லேடெக்ஸ் பெயிண்ட் குழந்தையின் சருமத்தோடு மிக வலுவாக ஒட்டிக்கொண்டதால், பலமுறை முயன்றும் அதை அகற்ற முடியாமல் அந்தத் தாய் திணறியுள்ளார்.

இது தொடர்பான காணொளி எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், குழந்தையின் உடலிலிருந்து பெயிண்ட்டை அகற்ற அவர்கள் போராடும் காட்சிகள் காண்போரை வேதனை அடையச் செய்துள்ளது.

“>

 

இந்தச் சம்பவம் இணையதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், “அழகுக்காகவும் போட்டிக்காகவும் குழந்தைகளின் மென்மையான சருமத்தில் இது போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்துவது ஆபத்தானது” எனப் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.