
பீகார் மாநிலத்தில் பள்ளி 5 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி கொண்டு சென்றுள்ளான். இந்த சிறுவன் 3-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவனை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் அந்த சிறுவனுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் பள்ளி முன்பாக திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் உடைமைகளை சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.