
தமிழகத்தில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாமா அல்லது புதிய பஸ் பாஸ் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் தற்போது புதிய பஸ் பாஸ் வரும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாசை பயன்படுத்தி பேருந்தில் செல்லலாம் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் பள்ளிகள் திறந்த பிறகு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான ஆவணங்கள் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பெறப்பட்டு விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விரைவில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.